திருமண மண்டபத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுட்டுக்கொலை

  தினத்தந்தி
திருமண மண்டபத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுட்டுக்கொலை

போபால்,மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் ஜவ்ரா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்காக நேற்று இரவே மணமகன், மணமகள் குடும்பத்தினர் மண்டபத்திற்கு வந்துள்ளனர்.அப்போது, மணமகன் குடும்பத்தை சேர்ந்த தம்பதி தங்கள் 5 வயது மகனான கோபு சக்யாவுடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் நேற்று இரவு 8 மணியளவில் மண்டத்தில் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். அவர்களின் மகன் கோபு சக்யா மண்டபத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த நபர், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கோபு சக்யாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமத்தனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூலக்கதை