ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

  தினத்தந்தி
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

காந்திநகர்,குஜராத்தின் வாபியில் உள்ள கே.பி.எஸ். கல்லூரியின் 8 மாணவர்கள் கொண்ட குழு நேற்று மாலை வல்சாத் மாவட்டத்தில் உள்ள கோலி நதி உருவாகும் இடமான பாண்டவ் குண்டிற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.அப்போது அவர்களில் ஒருவர் நீந்துவதற்காக ஆற்றில் குதித்தார், ஆனால் மூழ்க தொடங்கினார். இதையடுத்து, அவரை காப்பாற்ற மேலும் 4 பேர் நீரில் குதித்தனர், ஆனால் அவர்களும் நீரில் மூழ்க தொடங்கினர்.இதனைக்கண்ட சக மாணவர்கள் உதவிக்காக கூச்சலிட்டதால் ரோஹியா தலாத் கிராமத்தை சேர்ந்த சிலர் அவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 5 பேரை மீட்ட கிராம வாசிகள் அவர்களை கப்ரடாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சக மாணவரை காப்பற்ற சென்ற 4 மாணவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக மாணவரை காப்பற்ற சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை