பொதுமக்களின் வரி பணம் விவகாரம்; அமெரிக்கா திவாலாகி விடும்... எலான் மஸ்க் எச்சரிக்கை

  தினத்தந்தி
பொதுமக்களின் வரி பணம் விவகாரம்; அமெரிக்கா திவாலாகி விடும்... எலான் மஸ்க் எச்சரிக்கை

வாஷிங்டன் டி.சி.,அமெரிக்காவில் புதிதாக ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ல் டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்ட பின்னர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவருடைய மந்திரி சபையில் பலரை நியமித்து வருகிறார்.இதன்படி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டிரம்ப் அரசில், அரசாங்க திறனுக்கான துறையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பேட்டியில், 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையானது, முந்தின அரசிடம் இருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு வந்து சேர்ந்துள்ளது.இந்த பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்படி செய்ய தவறினால், அமெரிக்கா திவாலாகி விடும் என எச்சரித்து உள்ளார். அமெரிக்காவின் நிதியுதவி செலவிடுதல் பற்றி கடுமையாக விமர்சித்த மஸ்க், நாட்டில் வரி செலுத்தும் சராசரி அமெரிக்க குடிமகன், பைத்தியக்காரனாக இருக்க வேண்டும்.ஏனெனில், அவர்களின் வரி பணம் மோசம் வாய்ந்த வகையில் செலவிடப்படுகிறது என்றார். ஒட்டுமொத்தத்தில், பற்றாக்குறையில் இருந்து டிரில்லியன் டாலர்களை வெளியே எடுக்க வேண்டும் என்பதே இலக்கு. இது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விசயம்.ஒரு தனிநபருக்கும், நாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தனிநபர் அதிகம் செலவிடும்போது, அவர் திவாலாகி விடுகிறார். நாட்டுக்கும் இதுவே பொருந்தும். பெரிய அளவிலான வீணடிப்பு, மோசடி மற்றும் முறைகேடு ஆகியவை தொடர்ந்து நடந்து, ஆண்டுக்கு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்து விட்டது.ஜனாதிபதி டிரம்ப்பிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையுடன் அமெரிக்கா தரப்பட்டு உள்ளது. இது வருத்தத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.

மூலக்கதை