ரிது வர்மா நடிக்கும் 'மசாக்கா' படத்தின் புதிய பாடல் வெளியீடு

சென்னை,தமிழில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'நித்தம் ஒரு வானம்', 'மார்க் ஆண்டனி' உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், நடிகை ரிது வர்மா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் 'துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்திருக்கிறார்.தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் சந்தீப் கிஷன், ராவ் ரமேஷ், அன்ஷுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.திரிநாத் ராவ் நக்கினா இயக்கி உள்ள இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானநிலையில், தற்போது 3 -வது பாடலான 'பகிலி' வெளியாகி இருக்கிறது. இதனை மகாலிங்கம், சாஹிதி மற்றும் பிரபா ஆகியோர் பாடி உள்ளனர்.హేయ్ కొట్టు కొట్టు పగిలేటట్టు, ఊరూ వాడా ఈల వేసేటట్టు It's time to unleash the #Mazaka Mass Energy with a celebratory dance number3rd Single - #Pagili Lyrical Out Now!— https://t.co/gWqvXrHEcsA @leon_james Musical Sung by #Mahalingam, @itsahithii, #Prabha … pic.twitter.com/NUcxwvKpqm
மூலக்கதை
