'குட் பேட் அக்லி' படம் பற்றி கேட்ட ரசிகர் - ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்

சென்னை,இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் 'இடிமுழக்கம்', '13', 'கிங்ஸ்டன்', 'மென்டல் மனதில்' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், வருகிற மார்ச் 7-ம் தேதி 'கிங்ஸ்டன்' படம் வெளியாகிறது.மேலும் இசையமைப்பாளராக 'வீர தீர சூரன்', 'இட்லி கடை','பராசக்தி' என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்திற்கும் இசையமைப்பதாக கூறப்படுகிறது.இதில், இவர் இசையமைக்கும் 100-வது படம் 'பராசக்தி' ஆகும். இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் 'குட் பேட் அக்லி' படம் குறித்து கேட்ட ரசிகருக்கு ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்திருக்கிறார். அதன்படி, " தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறேன். சீக்கிரமே அதை பார்ப்பீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
மூலக்கதை
