உத்தர பிரதேசம்: மகா கும்பமேளாவிற்கு சென்ற பெண் படுகொலை - போலீஸ் விசாரணை

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில், மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பிரயாக்ராஜ் நகருக்கு வந்த பெண் ஒருவர், அங்குள்ள ஆசாத் நகர் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடன் ஒரு ஆண் வந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதியில் உள்ள பொது கழிப்பறையில் அந்த பெண்ணின் உடல் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுடன் ஒரு ஆண் வந்ததாக கூறப்படும் நிலையில், அந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
