ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

  தினத்தந்தி
ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் குப்பக்கோலி பகுதியை சேர்ந்த இளைஞர் சலீம் (வயது 20). இவர் கடந்த திங்கட்கிழமை மாலை அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மிற்கு சென்றுள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த சலீம் திடீரென மயங்கி விழுந்தார்.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் சலீமை மீட்டு அம்பலவயல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சலீம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சலீம் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை