கேரளாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் மாணவிகள் 2 பேர் பலி

  தினத்தந்தி
கேரளாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் மாணவிகள் 2 பேர் பலி

திருவனந்தபுரம்,கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பி.எஸ்சி கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் 47 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.நாகர்கோவிலில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட நிலையில் இன்று காலை கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே மலைப்பகுதியில் மேட்டுபெட்டி பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. எக்கோ பாயிண்ட் என்ற பகுதியில் சாலை வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஆதிகா, வேணிகா ஆகிய 2 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும், மாணவ- மாணவிகள் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அக்கம்பக்கத்தினர் காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் வளைவான சாலையில் அதிவேகமாக பஸ்சை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை