மத்திய பிரதேசம்; 3 பெண் நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

  தினத்தந்தி
மத்திய பிரதேசம்; 3 பெண் நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

போபால்,மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் சத்தீஷ்கார் எல்லை அருகே உள்ள வனப்பகுதியில், மாநில காவல்துறையின் நக்சல் எதிர்ப்பு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்கள் மற்றும் போலீசார் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலின்போது போலீசாரின் என்கவுன்டரில் 3 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் கையிருப்பில் இருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் படுகாயமடைந்த நக்சல்கள் சிலர் அங்கிருந்து தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிவர்களை பிடிப்பதற்காக போலீசார் 12 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை