பாகிஸ்தான்: பஸ் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் - 7 பேர் பலி

லாகூர்,பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து இன்று பஞ்சாப் மாகாணத்திற்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. பலூசிஸ்தானின் பர்ஹன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கும்பல் பஸ்சை இடைமறித்தது. பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிய அந்த கும்பல் அடையாள அட்டைகளை சோதித்தது. அதில், 7 பயணிகள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் அவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், 7 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
