சாம்பியன்ஸ் கோப்பை: யங், லாதம் அபார சதம்... பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

கராச்சி,8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. கராச்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். நிலைத்து நின்று ஆடிய ஆடிய வில் யங்(107), சதம் விளாசி அசத்தினார். அதே போல், அதிரடியாக விளையாடி சதம் விளாசிய டாம் லாதம் 118 ரன்களும், அரைசதம் கடந்த கிளென் பிலிப்ஸ் 61 ரன்களும் எடுத்தனர்.இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் ரன்கள் குவித்தது. பாகிஸ்தானில் அதிகபட்சமாக நசீம் ஷா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 321 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
மூலக்கதை
