'உன்னி முகுந்தன் அப்படிப்பட்டவர் கிடையாது'- நிகிலா விமல்

சென்னை,பிரபல நடிகை நிகிலா விமல். இவர் தமிழில் தம்பி, வெற்றிவேல், கிடாரி, போர் தொழில், வாழை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். இவர் தற்போது உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக 'கெட் செட் பேபி' என்ற படத்தில் நடித்துள்ளார்.வினய் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒய்வி ராஜேஷ் மற்றும் அனூப் ரவீந்திரன் திரைக்கதை எழுதியுள்ளனர். இப்படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், இதற்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ படம் குறித்து நிகிலா விமல் பேசி இருக்கிறார். அதன்படி, 'மார்கோவில் உன்னி முகுந்தன் மிகவும் வயலண்ட்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனால், உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் மிகவும் நல்ல, அப்பாவியான மனிதர் ' என்றார்.
மூலக்கதை
