ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனை பாதுகாக்கவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.இந்த ஆணையத்தில் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுபெற்ற நிலையில், தற்போது நீதிபதி ச.தமிழ்வாணன் தலைவராகவும், ஜெ.ரேகா பிரியதர்ஷினி உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.எனவே, இந்த ஆணையத்திற்கு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் துணைத்தலைவராக இமயம் என்பவரையும், செ.செல்வகுமார் சு.ஆனந்தராஜா, மு.பொன்தோஸ், பொ.இளஞ்செழியன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
