திமுக அரசு ஆட்சியில் இருந்து அகற்றப்படும் - அண்ணாமலை

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு குடும்பத்தின் மேலாதிக்கத்திற்காக, கறைபடிந்த அமைச்சரவையை கொண்டுள்ள, ஊழலின் மையமாக திகழ்தல், சட்டம் - ஒழுங்கை கண்டுகொள்ளாமல் இருத்தல், தமிழ்நாட்டை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுதல், அதிகரித்துவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை, சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணங்களால் இந்த திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களால் ஆட்சியில் இருந்து விரைவில் அகற்றப்படும்' என பதிவிட்டுள்ளார்.
மூலக்கதை
