கத்தார் ஓபன் டென்னிஸ்: ஆந்த்ரே ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தோகா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பெலிக்ஸ் அகர் அலியாசிம் (கனடா) உடன் மோதினார். இதில் முதல் செட்டை ரூப்லெவ் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை அலியாசிம் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை ஆந்த்ரே ரூப்லெவ் கைப்பற்றினார். முடிவில் ரூப்லெவ் 7-5, 4-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் ரூப்லெவ் - ஜாக் டிராபெர் மோத உள்ளனர்.
மூலக்கதை
