த.வெ.க. ஆண்டு விழா: 2 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்க திட்டம்

  தினத்தந்தி
த.வெ.க. ஆண்டு விழா: 2 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்க திட்டம்

சென்னை, நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 26-ந்தேதி காலை 9 மணிக்கு பூஞ்சேரியில் முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய்யை பார்க்க கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால், 2 ஆயிரம் நபர்களுக்கு பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை