பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்... இவர் சதம் அடிப்பார் - யுவராஜ் சிங் கணிப்பு

  தினத்தந்தி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்... இவர் சதம் அடிப்பார்  யுவராஜ் சிங் கணிப்பு

துபாய், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா நல்ல பார்மில் இருந்தால் 60 பந்துகளில் சதத்தை விளாசுவார் என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பார்மில் இருந்தால் ரோகித் 60 பந்துகளில் சதத்தை அடிப்பார். அது தான் அவருடைய தரம். ஒருமுறை துவங்கி விட்டால் அவர் பௌண்டரிகளை மட்டுமின்றி சிக்ஸர்களையும் எளிதாக அடிப்பார். ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் அவர் உலகின் சிறந்த ஒரு வீரர். 140 – 150 கி.மீ வேகத்தில் வீசினால் கூட ரோஹித் சர்மா அதை அசால்ட்டாக ஹூக் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடிக்கும் திறமையைக் கொண்டவர். 120 – 140 என்றளவில் கொண்டுள்ள அவர் தன்னுடைய நாளில் தனியாளாக உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.ரோகித் சர்மா பார்மில் இருந்தாலும் இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை. எப்போதுமே நான் மேட்ச் வின்னர்களை ஆதரவு கொடுப்பேன் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்தியாவுக்காக விராட் கோலியுடன் மிகப்பெரிய மேட்ச் வின்னராக இருந்து வருகிறார். தடுமாற்றமாக இருந்தும் ரோஹித் சர்மா ரன்கள் அடித்தால் அது எதிரணிக்கு ஆபத்தான அறிகுறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை