ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் அடித்துக் கொலை

ராஞ்சி,ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஜோட்சா கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் தனது ஆடுகளை காண ஆட்டுக்கொட்டகைக்கு வந்துள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஆடுகளை திருடுவதைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். இதனால் ஆட்டின் உரிமையாளர் கும்பலுடன் சேர்ந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்தனர்.இதனால் அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த மற்றொரு நபரும் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
