மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

சேலம், சேலம் அருகே ஒரு அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (வயது 59). இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியரின் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இது தொடர்பாக தங்களது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.இதனைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓவிய ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
