சினெல்லே ஹென்றி அரைசதம்... டெல்லிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உ.பி.வாரியர்ஸ்

பெங்களூரு,3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து உ.பி.வாரியர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரண் நவ்கிரே மற்றும் விருந்தா தினேஷ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் விருந்தா தினேஷ் 4 ரன்னிலும், நவ்கிரே 17 ரன்னிலும் அவுட் ஆகினர்.தொடர்ந்து களம் புகுந்த தீப்தி சர்மா 13 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 24 ரன்னிலும், ஸ்வேதா ஷெராவத் 11 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் 2 ரன்னிலும், உமா செத்ரி 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து சினெல்லே ஹென்றி மற்றும் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் சினெல்லே ஹென்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் குவித்தது. உ.பி.வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 62 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஜெஸ் ஜோனசென் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட உள்ளது.
மூலக்கதை
