அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்-ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அ.தி.மு.க. நகர செயலாளர் இல்ல விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-எடப்பாடி கூறும் கருத்துக்கள் வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும். அவை நடைமுறைக்கு ஒத்து வராது. அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். இந்த கருத்து தமிழக மக்களால் மூளை முடுக்குகளெல்லாம் ஒலித்துக் கொண்டுள்ளது.திராவிட வரலாற்றில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மட்டுமல்லாது நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது கூட இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தான் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.தூய அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் எந்தக் கட்சிக்கும் போக மாட்டார்கள் என்பது அ.தி.மு.க.வின் வரலாறு.இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
