மெரினா கடற்கரையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை கண்டு களிக்கும் ரசிகர்கள்

சென்னை, 8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.இந்நிலையில் இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடுகிறது. இதன்படி இந்த போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். இன்று வார விடுமுறை என்பதால், விடுமுறையை கொண்டாடும் விதமாக கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து பலர் கிரிக்கெட் போட்டியை ரசித்து வருகின்றனர்.
மூலக்கதை
