புது காதலனுடன் தொடர்பு... நண்பர்களுடன் சேர்ந்து காதலியை 2 முறை கூட்டு பலாத்காரம் செய்த முன்னாள் காதலன்

பிவாண்டி,மராட்டியத்தின் பிவாண்டி நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் பல ஆண்டுகளாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த காதல் கசந்ததும், வேறொரு நபருடன் அந்த இளம்பெண்ணுக்கு காதல் ஏற்பட்டது.இதனால், அவருடன் புதிய காதலை வளர்த்துள்ளார். இந்த விவரம் முன்னாள் காதலனுக்கு தெரிய வந்ததும் ஆத்திரமடைந்து உள்ளார். காதலியை பழிவாங்க சதி திட்டம் தீட்டியிருக்கிறார்.இதன்படி, கடந்த 19-ந்தேதி இரவு காதலியின் சகோதரரை கடத்தியிருக்கிறார். அவரை வைத்து, காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சம்பவ பகுதிக்கு அழைத்திருக்கிறார். அந்த இளம்பெண் சென்றதும், அவரையும், அவருடைய சகோதரரையும் நண்பர்களுடன் சேர்ந்து முன்னாள் காதலன் அடித்து, தாக்கியிருக்கிறார். அவரை அழைத்து வந்து விட்ட ஆட்டோ ஓட்டுநருக்கும் அடி விழுந்துள்ளது.இதன்பின்னர், நகாவன் பகுதியில் பள்ளி ஒன்றின் அருகே அந்த குற்றவாளி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பின்னர், பாத்திமா நகரில் உள்ள வேனின் உள்ளே அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.அவர்களிடம் இருந்து தப்பிய அந்த இளம்பெண், பிவாண்டி போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டத்தின் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் மற்றும் பிற குற்றங்களுடன் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளின் கீழ் முன்னாள் காதலன் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்கதை
