ஒரே நாடு ஒரே தேர்தல்; நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

புதுடெல்லி,டெல்லியில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) கூட்டம் நாடாளுமன்ற இல்லத்தில் இன்று நடந்து முடிந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர், கமிட்டி தலைவரான பி.பி. சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது, கூட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.உறுப்பினர்கள் அனைவரும் நேர்மறையான நோக்கத்துடன் இருந்தனர். முதலில் நீதிபதி அவஸ்தி முன்னுரை வழங்கியதும், முன்னாள் இந்திய தலைமை நீதிபதி யு.யு. லலித் பேசினார். அனைத்து உறுப்பினர்களும் அவர்களுடைய கருத்துகளை வழங்கினார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டன என்றார்.தேச நலனுக்காக கேள்வி எழுப்பிய மற்றும் நேர்மறை நோக்கத்திற்காக கமிட்டியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. ஒரு குழுவாக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றார்.ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவானது, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் மறுசீராய்வின் கீழ் உள்ளது. மக்களவை மற்றும் மாநில தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்த மசோதா முன்மொழிகிறது. எனினும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மூலக்கதை
