டிஜிட்டல் கைது: பெண்ணிடம் ரூ. 84 லட்சம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

புது டெல்லி,டிஜிட்டல் கைது என்பது ஒரு புதிய சைபர் மோசடி, இதில் சைபர் குற்றவாளிகள் சிபிஐ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் போல நடித்து உங்கள் பெயரில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுயது. இதில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது. இதனால் உங்களை கைது செய்யப் போகிறோம். இவ்வாறு வீடியோ அழைப்புகள் மூலம் டிஜிட்டல் கைது செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடியில் பலரும் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர்.அதேபோல ஒரு டிஜிட்டல் கைது சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். இவர்கள் டிஜிட்டல் கைது மூலம் ஒரு பெண்ணிடம் ரூ. 84 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இணையவழி குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ராம் சிங், அக்ஷய் குமார் மற்றும் நரேந்திர சிங் சவுகான் என்கிற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இது போல டிஜிட்டல் கைது எனக்கூறி பலரையும் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதில் அக்ஷய் குமார் ஒரு வங்கி ஊழியர் என்றும், ராம் சிங் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
