அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம்: முதல்-மந்திரி பகவந்த் மான் அதிரடி அறிவிப்பு

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவு திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக பஞ்சாப் கல்வி மந்திரி ஹர்ஜோத் பெய்ன்ஸ், தங்கள் பாடத்திட்டத்தில் பஞ்சாபி மொழியை ஒரு பாடமாக சேர்க்காத எந்தவொரு பள்ளிக்கும் அங்கீகாரம் மறுக்கப்படும் என்று கல்வி வாரியங்களை கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
