பா.ஜ.க. குறித்து விஜய் பதுங்கி பேசுவது ஏன்..? - சண்முகம் கேள்வி

சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், மத்திய பா.ஜ.க. அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜய் ஒன்றிய பாஜக அரசு குறித்து பதுங்கிப் பேசுவது ஏன்? ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது. @Shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM @TVKVijayHQ #NDAGovt #BJPFailsIndia pic.twitter.com/FYKq7e2VZQ
மூலக்கதை
