அசிங்கப்படுத்துகிறீர்களா?.. சீமான் மக்களுக்கான நேர்மையான தலைவர் - மனைவி கயல்விழி

சென்னை,நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக சீமான் வீட்டில் போலீசார் நேற்று சம்மன் ஒட்டினர். அந்த சம்மனை வீட்டின் பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காமல் போலீசாரை தடுத்து நிறுத்திய வீட்டின் காவலாளியும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியது.இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா?. என்ன பாலியல் வழக்கு இத்தன வருசமா. வீட்டில் இருந்து வெளியே வர சங்கடமாக இருந்ததால் படித்துப் பார்ப்பதற்காக சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும். சுவரில் ஒட்டாமல் வீட்டில் இருந்தவர்களின் கையில் கொடுத்திருக்கலாம். தற்போது அதற்காகதான் வீட்டிற்கு வெளியே பலகை வைக்கப்பட்டுள்ளது.போலீஸ் ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவது தெரிகிறது. போலீஸ் கொடுக்கும் சம்மனை கையெழுத்திட்டு பெற தயாராகவே இருந்தோம். கடந்த முறை சம்மன் கொடுக்க வந்தபோதே சீமான் தேதியை கொடுத்தார். ஆனால் பாதுகாவலரை கைது செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. கைது செய்தவர்களை போலீசார் அடித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது மிகவும் தவறானது.மனரீதியாக எங்களை துன்புறுத்த வேண்டும் என போலீசார் செயல்படுகின்றனர். எங்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் செயல்படுகிறார். எங்களை அசிங்கப்படுத்துகிறீர்களா?. அவர் (சீமான்) மக்களுக்கான நேர்மையான தலைவர். நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம். காவல்துறைக்கு மேலே இருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள்.தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி எதிர்கொள்வார்; விசாரணையை சந்திப்பார். அவ்வளவு வழக்குகளை சீமான் எதிர்கொள்வதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
