சென்சென்க்ஸ் 1,414 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

மும்பை, வார இறுதி நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்று காலை சென்செக்ஸ், 74,201.77 என்ற புள்ளிகளில் தொடங்கி நிலையில், பங்குச்சந்தை முடிவில் 1,414 புள்ளிகள் சரிந்து 73,198 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 420 புளிகள் சரிந்து 22.124 புள்ளிகள் வர்த்தகம் நிறைவு பெற்றது. பங்கு சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 8 லட்சம் கோடி இழப்பு என தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக்ப்போர் அச்சம், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மூலக்கதை
