சத்தீஷ்கரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

  தினத்தந்தி
சத்தீஷ்கரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

ராய்பூர்,மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல் மந்திரி காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளது. இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததுஇந்த நிலையில், துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், சைதன்யா பாகல் மற்றும் அவருக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதற்கிடையே சோதனைக்கு சென்ற போது அமலாக்கத்துறையினர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மூலக்கதை