தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் - சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை, சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும், இதை முறையாக பின்பற்றாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியில் இதற்கான கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள கடைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூலக்கதை
