'மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது' - உதயநிதி ஸ்டாலின்

சென்னை, சென்னை கலைவாணர் அரங்கில் 72 ஜோடிகளின் திருமணத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கூறியதாவது;-"இன்று திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அந்த குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்தியது மத்திய அரசு. அதை தமிழ்நாடு வெற்றிகரமாக செய்தி காட்டியுள்ளது. ஆனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு இன்று தண்டிக்கப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் அதிக தொகுதிகளை பெறும் சூழல் உருவாகி உள்ளது. வடமாநிலங்களில் சுமார் 100 தொகுதிகள் வரை அதிகரிக்கப் போகிறது. தொகுதி மறுவரையறை மட்டும் வந்துவிட்டால் தமிழ்நாட்டிற்கு 8 தொகுதிகள் குறைந்து 31 தொகுதிகளாகிவிடும். தொகுதிகள் குறையும்போது நமக்கான உரிமைகளை நாம் பெற முடியாது."இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலக்கதை
