புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.... ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது

  தினத்தந்தி
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.... ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை கடந்து உச்சத்தை எட்டியது. அதன்பின்னர் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை