இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி: ஜனாதிபதி அனுர குமார திசநாயகவுடன் சந்திப்பு - லங்காசிறி நியூஸ்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், நான்காவது முறையாக அடுத்த மாதம் மீண்டும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசநாயகவை சந்திக்கும் அவர், பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியாவையும் சந்தித்து பேசுகிறார். இதில் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்நிலையத்தை இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மூலக்கதை
