தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம்: சிறப்பு கலந்துரையாடல்  லங்காசிறி நியூஸ்

தமிழர்களறியில் யாழ்ப்பாணத்தமிழ் அகராதி நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது. திருநிறை நடராசா சிறிரஞ்சன் ஈழத்தின் தீவகம், புளியங்கூடலைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். தற்போது சுங்கப்பதில் (பிரதிப்) பணிப்பாளராகப் பணியாற்றும் இவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் ஆவார். அத்துடன், குடும்பம், வாழுதல், சிறக்கச் சில கதைகள் ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். தமிழ் அகராதி ஆவணப்படுத்தல் அமைப்பு - சுவிட்சர்லாந்து அமைப்பினால் 15.03.2025 சனிக்கிழமை மாலை 15.30 மணிமுதல் பேர்ன் தமிழர் களறி ஆவணக்காப்பகத்தில் "யாழ்ப்பாணத் தமிழ் அகராதி" நூல் அறிமுகம் மற்றும் ஈழத்தமிழர் எமது வக்காறுகளைச் சுவடிப்படுத்தும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழர் களறி ஆவணக்காப்பகம் துணையாய் இருந்தது. இவ்வகராதி யாழ்ப்பாணத்தமிழ் அகராதி இலங்கை அரசின் சுயபுலமைத்துவம் மற்றும் ஆய்வு சார்ந்த படைப்பு இலக்கியம் எனும் வகைப்பாட்டில் சாகித்திய மண்டல விருது பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் சிறந்த அகராதிக்கான விருதையும் பெற்றுள்ளது. வரவேற்பினையும் நூலாசிரியர் அறிமுகத்தினையும் பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் திருநிறை. பொன்னம்பலம் முருகவேள் ஆற்றினார். நூலாசியரை அறிமுகம் செய்து வைத்தார். எப்படி நற்பயிர்கள் கடுமையான சூழுலில் வளர்ந்து உலகிற்கும் மக்களுக்கும் நற்பயன் அளிக்குமோ அவ்வாறே தன்முயற்சியில் முன்னேறி வளர் பெருக்கி, வணிகத்துறையில் விரிவுரையாளராக இருந்தும், தமிழ் மீது கொண்ட பற்றாலும் ஆர்வத்தாலும் யாழ்ப்பணத்தமிழ் அகராதி எனும் இந்நுiலை திரு. சிறிரஞ்சன் அளித்துளார் என்பதையும், நூலாசிரியரை அறிமுகம் செய்து, அவரின் உழைப்பையும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தையும் முருகவேள் ஐயா பாராட்டினார். திரு. சிறிரஞ்சன், இவ்வகராதியை உருவாக்க காரணமான அவரது பட்டறிவு (அனுபவத்தைப்) பகிர்ந்து கொண்டார். இலங்கையின் தெற்கில் 12 ஆண்டுகள் வாழ்ந்து, பின்னர் மீண்டும் ஊருக்குச் சென்றபோது, மறைந்த சொற்களை நினைவில் கொண்டு புதுப்பித்த அறிவைச் சேர்த்து இந்த அகராதியை உருவாக்க முயன்றதாக விளக்கினார்./// பேராசிரியர் சிவத்தம்பியுடன் உரையாடும்போது, யாழ்ப்பாணத்தமிழில் உள்ள சொற்களின் செறிவை உணர்ந்ததாக தெரிவித்தார். புதிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சொற்களை தமிழில் வடிவமைப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். இலங்கையைத்தாண்டி பல நாடுகளில் இந்நூலை அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நூலாசிரியருக்கும் பார்வையாளர்களுக்கும் உளநிறைவை அளித்தது. தமிழர்களறிக்கு இவரது படைப்புகள் கையளிக்கப்பட்டன. தமிழர்களறியின் சார்பாக திரு. சிவகீர்த்தி தில்லையம்பலம் நூலாசிரியரின் படைப்புகளை ஏற்றுக்கொண்டார்.//// வருகை அளித்த அனைவரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்து, நன்றி தெரிவித்தனர். மாலை 18.00 மணிக்கு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் இனிதே நிறைவுற்றது. தனது நூல்களின் இரண்டாம் பதிப்புகளை, மேலும் ஈழத்தின் பல வழக்கு மொழிகளையும் அந்தந்த மாவட்டங்களில் பெயருடன் வெளியிடுவதற்கான எண்ணம் இருப்பதாக திரு. நடராசா சிறிரஞ்சன் தெரிவித்தார். ⁠தமிழ் மொழிக்கான ஈடுபாடும் உழைப்பும் என்றும் தொடரட்டும்! 

மூலக்கதை