ஐ.பி.எல். 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த இந்திய முன்னாள் வீரர்

மும்பை,இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த தொடர் குறித்தும், ஐ.பி.எல். அணிகள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு:-ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட், தீபக் சஹார் மற்றும் சூழ்நிலையை பொறுத்து ஒரு இளம் இந்திய வீரர்.
மூலக்கதை
