மின்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

  தினத்தந்தி
மின்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை, தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் மின்துறை தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயசங்கரன் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "மின்மாற்றி பழுதை சரிசெய்ய விவசாயிகளிடமோ, நுகர்வோரிடமோ கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மூலக்கதை