தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன?

சென்னை,தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் பெரும்பாலான நாட்களில் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த 14-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400 என்ற உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் ஓரிரு நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 18-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.20, பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 310-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 8 ஆயிரத்து 270-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மூலக்கதை
