சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

  தினத்தந்தி
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

பாசெல், சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.பெண்களுக்கான இரட்டையர் பிரவு போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடியான திரிஷா ஜோலி- காயத்ரி கோபி சந்த், ஜெர்மனியின் அமெரிலி லீமேன்- செலின் ஹப்ஸ்ச் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடியான திரிஷா- காயத்ரி 21-12, 21-8 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

மூலக்கதை