கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டமானது மக்கள் மத்தியில் எடுபடாது: ஜி.கே.வாசன்

  தினத்தந்தி
கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டமானது மக்கள் மத்தியில் எடுபடாது: ஜி.கே.வாசன்

சென்னை,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காரணம் தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை திசை திருப்பவே, அறிவிக்கப்படாத பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற ஒன்றை அறிவித்ததாக எடுத்துக்கொண்டு விளம்பர நோக்கில் செயல்பட்டது தான்.இன்று தமிழக முதல்-அமைச்சர் அவர்கள் சென்னையில் தென்மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார்கள். இன்றைய தமிழக அரசு மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்க்க முடியாத அரசாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது அதனை திசை திருப்பும் வகையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது.மேலும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்மாநிலத்தில் உள்ள மந்திரிகளையும், கட்சித்தலைவர்களையும் கூட்டி மக்களிடம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பும் விதமாக இக்கூட்டம் நடைபெற்றதாகவே தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) கருதுகிறது.குறிப்பாக மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடாத போது எப்படி பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று தமிழக அரசு முடிவு செய்யும்பாராளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றால் அதற்கு வரைமுறைகளும், கோட்பாடுகளும் இருக்கின்ற போது மத்திய அரசைக் குறை கூறும் வகையில் அனுமானமாக தமிழக அரசு ஒரு முடிவை எடுத்துக்கொண்டு இக்கூட்டத்தை கூட்டியிருப்பதை கலைந்து போன இந்தி கூட்டணியை ஒன்று சேர்க்கும் முயற்சியாகத்தான் கருத முடியும்.மேலும் முக்கியமாக மத்திய உள்துறை மந்திரி அவர்கள் பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்பது விகிதாச்சார அடிப்படையில் தான் அமையும், மக்கள் தொகை அடிப்படையில் அமையாது என்று விளக்கியும் கூட, வேண்டும் என்றே மத்திய அரசுக்கு எதிர்ப்பாக இக்கூட்டம் நடைபெற்றது.இதுவரையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பற்றி அறிவிக்காத போது தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின், அரசு ஊழியர்களின், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டங்கள், போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை தினமும் கொலை, திருட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பலவற்றை மறைப்பதற்காகவே அறிவிக்கப்படாத ஒன்றை அறிவித்ததாக எடுத்துக்கொண்டு விளம்பர நோக்கில் செயல்படுகிறார்கள்.எனவே தமிழக அரசின் தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமான இன்றையக் கூட்டமானது மக்கள் மத்தியில் எடுபடாது என்றும், தமிழக அரசு மக்கள் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவிக்க விரும்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை