இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  தினத்தந்தி
இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் , தேனி , மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மூலக்கதை