ஐபிஎல் : சூப்பர் ஓவர் விதிகளில் புதிய மாற்றம்

கொல்கத்தா,10 அணிகள் கலந்து கொள்ளும் ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக, இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் அணி எது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் சூப்பர் ஓவர் தொடர்பாக புதிய விதியை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் சூப்பர் ஓவர்களுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் வழங்கப்படும்.அந்த நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர்கள் வேண்டுமானாலும் விளையாடிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.போட்டி சமன் ஆன 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்கும். அதுவும் சமன் ஆகும் பட்சத்தில் அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் தொடங்கும். நேரக் கட்டுப்பாட்டை பொறுத்து, எது கடைசி சூப்பர் ஓவராக இருக்கும் என கள நடுவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
