வெளிநாட்டு உதவி நிறுத்தம் எதிரொலி: அமெரிக்காவிடம் நிதியை திரும்ப கேட்கும் ஐரோப்பிய நாடுகள்

  தினத்தந்தி
வெளிநாட்டு உதவி நிறுத்தம் எதிரொலி: அமெரிக்காவிடம் நிதியை திரும்ப கேட்கும் ஐரோப்பிய நாடுகள்

வாஷிங்டன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றவுடனே, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தி வைத்தார். இந்த பணிகளை செய்யும் அமெரிக்க நிறுவனத்துக்கு தடை விதித்தார். ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு உதவிகளை செய்து வந்த அமெரிக்க நிறுவனத்தில் அமெரிக்காவின் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நன்கொடைகளை வழங்கி இருந்தன.ஆனால் இந்த உதவிகளை டிரம்ப் நிறுத்தியதால், தங்கள் பணத்தை திரும்ப வழங்குமாறு ஐரோப்பிய நாடுகள் கேட்டு வருகின்றன. அந்தவகையில் நார்வே, சுவீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் கூட்டாக வழங்கி இருந்த 15 மில்லியன் டாலரை (சுமார் ரூ.128 கோடி) திரும்ப வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளன.தாங்கள் வழங்கிய இந்த பணம் தேவைப்படும் நாடுகளுக்கு செலவிடப்படுமா? அல்லது திரும்ப தரப்படுமா? என டிரம்ப் நிர்வாகத்தை கேட்டுள்ளன. எனினும் இது குறித்து அமெரிக்காவிடம் இருந்து பதில் எதுவும் வழங்கப்படவில்லை.இந்த விவகாரத்தில் சுவீடன் அரசின் செய்தி தொடர்பாளர் ஜூலியா லின்ட்ஹோம் கூறுகையில், 'இது எங்களுக்கு ஒரு கவலையாக இருக்கிறது. வெளிநாட்டு உதவி நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கிய எங்கள் கூட்டாளிகள் அதற்கான பயனை பெற வேண்டும்' என தெரிவித்தார்.

மூலக்கதை