பிரித்தானியா விதித்த தடை - நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள இலங்கை அரசு - லங்காசிறி நியூஸ்

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிகள் மூவர் மற்றும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது தடை விதிப்பதாக பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் அறிவித்தது. இந்த தடை தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், "பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த காலங்களில் நிகழ்ந்த எந்தவொரு மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும். இந்த தடை பிரித்தானிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கை. இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு உதவுவதில்லை. மாறாக சிக்கலான நிலைக்குள்ளேயே உட்படுத்துகிறது என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
