புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக சட்டசபையில் தீர்மானம்

  தினத்தந்தி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16வது முறையாக சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி, யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியது புதுச்சேரி அரசு.புதுச்சேரிக்கு உடனே நிர்வாக விடுதலை வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தனிநபர் தீர்மானங்களை கொண்டு வந்தனர். நிர்வாக அதிகாரம் இல்லாமல் நிதிச்சுமையில் புதுச்சேரி சிக்கி இருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மூலக்கதை