மே.வங்காளத்தில் பாஜக மூத்த தலைவர் வீட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

  தினத்தந்தி
மே.வங்காளத்தில் பாஜக மூத்த தலைவர் வீட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும் பாஜகவிற்கும் இடையே பல்வேறு விவரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பி.யுமான அர்ஜூன் சிங் வீட்டின் அருகே குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் குண்டுகளை வீசியுதுடன் துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.இதைப்பார்த்ததும் அர்ஜூன் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியவர்களை விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பாஜக முன்னாள் எம்.பி வீட்டருகே துப்பாக்கி சூடு நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அங்கு நிலமை கட்டுக்குள் இருப்பதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது. சட்டத்தின் படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காவல்துறை ஆணையர் அஜய் தாகூர் கூறினார். சம்பவம் நடைபெற்ற இடம் அருகே ஒரு மில் இருப்பதாகவும் அந்த மில் தொழிலாளர்கள் இரு குழுக்களாக மோதிக்கொண்டதையடுத்து இந்த துப்பாக்கி சூடு நடைபெற்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை