16 நாட்கள் சிறையில் வைத்தபோதும்... பழிவாங்கும் செயல்களில் ஈடுபடவில்லை: ரேவந்த் ரெட்டி

  தினத்தந்தி
16 நாட்கள் சிறையில் வைத்தபோதும்... பழிவாங்கும் செயல்களில் ஈடுபடவில்லை: ரேவந்த் ரெட்டி

ஐதராபாத்,தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்டசபையில் இன்று பேசும்போது, பழிவாங்கும் அரசியலில் நான் ஈடுபட்டால், எதிர்க்கட்சியினரால் தன்னுரிமையாக எதுவும் பேச கூட முடியாது. அதிலும் அவர்கள், பாரதீய ராஷ்டீரிய சமிதி ஆட்சியின் கீழ் நான் சிறையிலடைக்கப்பட்டது போல், சிறைக்கு பின்னால் இருப்பார்கள்.ஒரு நபர் கூட வந்து, என்னை சந்திக்க விடாமல் 16 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். எனினும், என்னுடைய கோபம் கட்டுக்குள்ளேயே இருந்தது.நாங்கள் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடவில்லை. சிறையில் இரவில் விளக்குகளை எரிய விட்டு, தூங்க விடாமல் வைக்கப்பட்டு இருந்தேன். ஓர் எம்.பி.யாக இருந்தபோதும், குற்றவாளி போல் நடத்தப்பட்டேன். மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க கூட செர்லபள்ளி சிறையில் இருந்து செல்ல விடாமல் தடுத்து விட்டனர் என கூறியுள்ளார்.இது அரசியல் பழிவாங்கும் செயல் இல்லையா? எனினும், பதிலுக்கு நான் பழிவாங்கும் செயலில் ஈடுபடவில்லை. பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதற்காக மக்கள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் கூறினார்.அவையில் கே.டி. ராமராவ் இன்று பேசும்போது, அரசும் எதிர்க்கட்சியினரும் தங்களுடைய பார்வைகளை முன்வைக்கும் வகையிலான தளத்தில், வெளிப்படையாக கருத்து பரிமாற்றங்களை மேற்கொள்வதிலேயே ஜனநாயகத்தின் சாராம்சம் உள்ளது என கூறினார்.அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டி காட்டி வருகின்றனர். அவர்களை தூண்டி விட்டால், ஊழல் தொடர்பான தீவிர குற்றச்சாட்டுகளை எழுப்புவார்கள். ஆளுங்கட்சியில் உள்ள உட்கட்சி பூசலையும் எழுப்புவார்கள் என்று கூறினார்.

மூலக்கதை