"ராபின்ஹுட்" படத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'.நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது.இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டேவிட் வார்னர் கலந்து கொண்டார். அப்போது வார்னர், மேடையின் கீழ் புஷ்பா ஸ்டெப் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் மேடையில், ஸ்ரீலீலா, கெட்டிகா ஷர்மா மற்றும் நிதினுடன் நடனமாடினார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளிட்டநிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.ராபின்ஹுட் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் "ராபின்ஹுட்" படத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு ரூ 2.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சிறிய கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு தெலுங்கு சினிமாவில் இதுவரை யாரும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்கிறார்கள்.THE BIGGEST SUMMER ENTERTAINER IS ALMOST HERE #Robinhood GRAND RELEASE WORLDWIDE TOMORROW.Bookings now open in ALL REGIONS & ALL CENTRES WORLDWIDE ❤️️ https://t.co/ogblfmwZTd@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @davidwarner31 @gvprakash #RajendraPrasad… pic.twitter.com/SX2I5rpqSP
மூலக்கதை
