அடுத்த படங்களின் அப்டேட்டுகளை பகிர்ந்த ஸ்ரீலீலா

  தினத்தந்தி
அடுத்த படங்களின் அப்டேட்டுகளை பகிர்ந்த ஸ்ரீலீலா

சென்னை,மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'குண்டூர் காரம்' படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் நடன கலைஞராக இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா. அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரூல்' படத்தில் 'கிஸ்சிக்' பாடலில் நடனமாடி கவனத்தை பெற்றார்.இவர் தற்போது தமிழ் சினிமாவில் பராசத்தி படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக நடித்துள்ள ராபின்ஹுட் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் தனது படங்களின் அப்டேட்டுகளை ஸ்ரீலீலா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 'தற்போது தமிழில் "பராசக்தி" படத்திலும் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து "மாஸ் ஜதாரா" படத்திலும் நடித்து வருகிறேன். மேலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ஜூனியர் படத்திலும் நடிக்கிறேன். இவை தவிர, இன்னும் சில படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதனை அறிவிப்பேன்' என்றார்.

மூலக்கதை