6 மாவட்ட செயலாளர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் எச்சரிக்கை

  தினத்தந்தி
6 மாவட்ட செயலாளர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் எச்சரிக்கை

சென்னை,தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விஜய் கூட நான் இல்லை என்றால் என் நிழலே என் கூட வராது . தவெகவில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படுகிறது. உழைக்காதவர்கள் யாருக்கும் பதவிகள் வழங்கப்படுவதில்லை நாங்கள் வீர வசனம் பேசி விட்டு கைத்தட்டல் வாங்கும் கூட்டம் அல்ல, உண்மையாக உழைக்கும் கூட்டம். இதுவரை 54 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி மாநாடு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். கிராமங்கள் தோறும் தவெக கிளை உருவாக்கப்படும்" என்றார். மேலும், முறையாக பூத் கமிட்டி அமைக்காத 6 மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை